டொலரின் பெறுமதியில் மாற்றம்
இன்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.8026 ஆகவும், விற்பனை விலை ரூபா 305.1511 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை ஸ்ரேலிங் பவுனின் கொள்வனவு விலை 373.2165 ரூபாவாகவும், விற்பனை விலை 387.7862 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குவைத் தினாரின் விலை 980.9164 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.