இலங்கைசெய்திகள்

280 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..!

Share
24 65fbc9b04ce58
Share

280 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..!

ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது.

ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

தற்போது ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 18ஆம் திகதியை விட கடந்த 19ஆம் திகதி (19.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியிருந்தது.

இதேவேளை பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாம் கட்டுப்படுத்துகிறோம் என்பதால் தற்போதைய நிலைமை சரியாகிவிட்டது என்று அர்த்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், பணவீக்கம் என்பது பொருட்களின் விலைக் குறைவல்ல. அப்படியானால் பணவாட்டம் ஏற்பட வேண்டும். பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.

அதனால் நிலைமை சரியாகிவிட்டது என அர்த்தப்படாது. சீரான நிலைக்கு வருவதற்கு உரிய காலம் எடுக்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் நாட்டை இருந்த இடத்தில் இருந்து மேலே கொண்டு செல்லும் வகையில் தயாராகி வருகின்றன.

ஜனாதிபதியின் கூற்றுப்படி, வருட இறுதியில் ஒரு புதிய மாற்றத்தை நாம் எவ்வாறு பார்க்க முடியும்? ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது இந்த நாட்டைப் பற்றித் தெளிவாகச் சிந்திப்பவர்கள் ஒன்று கூடும் மேடை அமைக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்வு ஜனாதிபதித் தேர்தலுக்கு பல்வேறு நபர்கள் கோரிக்கை விடுத்தாலும் இவர்களுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் தொடர்பில் மக்களிடம் ஒரு உணர்வு உள்ளது.

அனுபவம், கல்வி, சர்வதேச பிரச்சினைகளை சமாளிக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், நாடு சிக்கலில் சிக்கியபோது கையாண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நல்லதொரு தீர்மானத்தை எடுக்கும் திறன் மக்களுக்கு உள்ளது. மக்கள் சிறந்த நபரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அனுபவம், கல்வி, சர்வதேச பிரச்சினைகளைச் சமாளிக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன், நாடு சிக்கலில் சிக்கியபோது கையாண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தலில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...