அமெரிக்க உதவியுடன் நிவாரணப் பணிகள் தீவிரம்: C-130J விமானங்கள் கட்டுநாயக்காவை வந்தடைந்தன! 

G7joV9tbwAAL77S

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் (Super Hercules) ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று (டிசம்பர் 7) கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன.

இந்த அமெரிக்க அணி, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அடையாளம் கண்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகாலப் பொருட்களைக் கொண்டு செல்ல இலங்கை விமானப்படையுடன் (SLAF) இணைந்து பணியாற்றவுள்ளது.

கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், நீர், சுகாதார வசதிகள், உணவு மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவை அடங்கும்.

“இந்தத் திட்டம், உயிர் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பெரியளவில் போக்குவரத்து மற்றும் விநியோக பலத்தை அளிக்கும்,” என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

Exit mobile version