2 1
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான USAID உதவித் தொகை 90 வீதத்தினால் குறைகிறது

Share

இலங்கைக்கான USAID உதவித் தொகை 90 வீதத்தினால் குறைகிறது

அமெரிக்காவின் யூ.எஸ்.எயிட் (USAID) நிறுவனத்தினால் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவி ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு 90% குறைக்கப்படும் என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை அரசுக்கும் பல அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் (NGO) கிடைக்கும் நிதியுதவிகள் கணிசமாக குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உதவிகளால் செயல்பட்ட நான்கு முக்கிய அரசுத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டில் மட்டும் USAID நிறுவனத்தினால் 21 பில்லியன் ரூபா மதிப்புள்ள திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் இத்தீர்மானத்தால், இலங்கைக்கான உதவித் திட்டங்கள் தடைப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவை மீளாய்வு செய்யுமாறு USAID இலங்கைக்கான பிரதிநிதியுடன் கலந்துரையாட முயன்றதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் பெறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

60 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட வளர்ச்சிப் பணிக்காக வழங்கப்பட்ட USAID நிதி 90% குறைக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

USAID நிதியில் செயல்படும் திட்டங்களை நிறுத்துமாறு அமெரிக்க அரசுத்துறை இலங்கையின் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பியுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் (National Peace Council) நிர்வாக இயக்குநர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

USAID நிதி குறைவதால், சில அரசசார்பற்ற நிறுவனங்கள் ஐரோப்பிய தூதரகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...