உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

tamilni 465

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

வருடாந்த வருமான அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுமெனவும், செலுத்த வேண்டிய வரியில் 5 வீதம் தண்டப்பணம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வருடம் ( 2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கை இன்றுடன் (30.11.2023) முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வருமான அறிக்கையை வழங்காதவர்களிடம் இருந்து 50000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version