24 6662b2b1ef46e
இலங்கைசெய்திகள்

உறுதியற்ற நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு

Share

உறுதியற்ற நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு

வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள உயர்வு இம்மாதமும் உறுதியற்ற நிலையில் இருப்பதாக தோட்டத் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே21 ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டுமென தொழில் அமைச்சின் செயலாளர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனினும், இம்மாதத்திற்கான சம்பள இறுதி கணக்கு கடந்த 05ஆம் திகதி தோட்ட நிர்வாகங்களால் முடிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதமும் சம்பள உயர்வில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பள உயர்வை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பு காட்டி வந்திருந்தது. இதற்கமைய, சம்பள அதிகரிப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 21 பெருந்தோட்ட நிறுவனங்களால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கானது, கடந்த 03ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது,மேன் முறையீட்டு நீதிமன்றம், வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென தீர்ப்பளித்தது.

எனவே, இம்மாதம் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ள சம்பளம் 1,700 ரூபாவின் அடிப்படையிலேயே இருக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் சம்பள இறுதி கணக்கில் மாற்றம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என தொழிற்சங்க தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பள அதிகரிப்பு தொடர்பிலான சுற்றுநிருபங்கள் எவையும், தங்களுக்கு கிடைக்கவில்லையென தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...