tamilnih 16 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கறுப்பு ஜுலை கலவரத்திற்கு ஐ.தே.க தலைமைகளே காரணம்

Share

தமிழ் மக்களுக்கு எதிராக ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கிய ஐக்கிய தேசிய கட்சியினால் தான் 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரம் மேற்கொள்ளப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே ரணிலுக்கு எதிராக யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பாக புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஊடகப் பிரிவினால் நேற்று (21.02.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்டவர்கள் இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய விஜயத்தை மேற்கொண்டு வந்ததன் பின் இந்த நாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எம்மீதான மிகப் பெரிய ஆர்வமும் கவனமும் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் தமிழ் மக்கள் எம்மோடு இணைவதைத் தடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள பல்வேறு குழுக்கள் மக்கள் விடுதலை முன்னணியின் இடையீட்டுடன் தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரம் மேற்கொள்ளப்பட்டதென எமக்கு எதிராக ஆதாரமற்ற, அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டு பிரச்சாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் செய்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய்யாகும்.

இந்த கலவரத்தின் பின்புலத்தை நாம் ஆராய்ந்தால் 1983 கறுப்பு ஜுலை என்பது குறிப்பாக இலங்கையில் வடக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய எல்லா மாகாணங்களிலும் வசித்த தமிழ் மக்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்ட அடிப்படையில் கட்டவிழ்த்துவிட்ட கடுமையான ஒரு இனவாத செயற்பாடாகும்.

குறிப்பாக ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு ஜனநாயகத்தின் மீது அடக்கு முறையைப் பிரயோகித்து படுமோசமான ஆட்சியைத்தான் செய்து வந்தது.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் 1977 அம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசாங்கத்தை அமைக்கும் போது இந்நாட்டில் யுத்தம் இருக்கவில்லையே? ஜே.ஆர் மற்றும் ரணிலின் தவறான இனவாத அரசியலின் காரணமாகத்தான் 1981, 1982 இல் முரண்பாட்டு நிலைமையொன்று இலங்கையில் உருவாகியிருந்தது

1983 ஆம் ஆண்டிலே முரண்பாடு உச்சம் கண்டிருந்தது. அதன் விளைவாக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தக் கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து ஜே.ஆர். என்ன செய்தார்? மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சி ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகளை தடைசெய்தார். தடைசெய்து சில மாதங்களுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சியின் தடைகளை நீக்கினார்.

ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் தடையை நீக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் விடுதலை முன்னணி 1980களில் மிகவும் பலம்பொருந்திய வகையில் வளர்ந்து வந்தது. அதாவது, இடதுசாரியின் மிகவும் பலம்பொருந்திய மக்கள் இயக்கமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது.

அண்மைக் காலத்தில் மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்தின் காடையர்கள் காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு பழியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சித்தனர். ஆனால், சமூக வலைத்தளங்கள் இருந்ததனால் ராஜபக்ஸர்களால் அதனைச் செய்ய முடியவில்லை.

ஆனால், 1983 யுகம் அப்படிப்பட்டதல்ல. எனவே, 83 கறுப்பு ஜூலை இலங்கை வரலாற்றை முற்றாகவே மாற்றியமைத்தது என்பதை தெட்டத்தெளிவாகக் கூறுகிறோம்.

நாங்கள் தமிழ் சகோதர சகோதரிகளை இயலுமான நேரங்களில் காப்பாற்றினோம். அவர்களை பாதுகாத்தோம்.

எனவே, வங்குரோத்து அடைந்துள்ள இந்த ராஜபக்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் சேறுபூசும் இயக்கங்களிடம் அகப்படாமல் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக எம்மோடு இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...