24 665691ab08400
இலங்கைசெய்திகள்

ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி

Share

ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி

ஜனாதிபதி தேர்தல மற்றும் பொதுத் தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போடவேண்டும் என்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் (Palitha Range Bandara) கோரிக்கையை ஏற்கமுடியாதது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக்கொள்வதற்கு சமனாகும் என்று கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தீவிரமான அறிக்கை என்பதோடு மக்களின் இறையாண்மையை மீறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று நலிந்த கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளாக நீடிக்க ஒரு வாக்கெடுப்பை நடத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது.

இதன் மூலம் எந்தவொரு தேர்தலிலும் ரணிலின் தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அதிகார பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்சவை மக்கள் வெளியேற்றியுள்ளனர்.

எனவே, 134 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றுவது மக்களுக்கு ஒரு பெரிய காரியமல்ல என்பதை ஐக்கிய தேசியக்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...