பல்கலை மாணவி கழுத்தறுத்து கொலை! விசாரணையில் வெளிவந்த தகவல்

25 679a2f5386ca3

இரத்தினபுரியில் தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின்னால் இருந்து வந்த நபர், கழுத்தறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(29.01.2025) அலபட பொலிஸ் எல்லைக்குட்பட்ட தெல்லபட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 29 வயதுடைய தெல்லபட பிரதேசத்தை சேர்ந்த யுவதியே உயிரிழந்துள்ளார்.

இதன்போது, கொலையாளி சம்பவ இடத்திலேயே விஷம் குடித்து விட்டு ஓடிய போதும் அருகிலிருந்த வயலில் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, கிராம மக்கள் அவரை இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 32 வயதுடைய குறித்த இளைஞன் மாணவியின் சக மாணவன் என்பதோடு அனுராதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

கொலை சம்பவம் இடம்பெற்ற போது, மாணவியின் தாயார் வீட்டில் வேறு வேலை செய்துகொண்டிருந்ததாகவும் தந்தை வெளியில் சென்றிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version