26 11
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

Share

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவதில் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.

இந்த பதவி வெற்றிடங்கள் நிரப்பப்டாமையினால் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே, அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு குறித்த மாணவர்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்! | University Stdents Intake Delayed

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வ ஆவணங்கள் கிடைக்கப் பெற முன்னதாகவே சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களை சேர்க்கும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களின் காலம் விரயமாகக் கூடாது என்பதற்காக இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி அவசியமாகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாதாந்தம் இரண்டு தடவைகள் மட்டுமே கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, எதிர்வரும் 24ம் திகதியே ஆணைக்குழுவின் அடுத்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வரையில் புதிய அதிகாரிகள் கூடாவிட்டால் மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மேலும் தாமதமடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கடந்த 14ம் திகதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...