tamilni 86 scaled
இலங்கைசெய்திகள்

அம்பலமான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடி

Share

அம்பலமான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடி

கடந்த ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்காக ஏழு வருட விடுமுறை எடுத்து உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 90% ஆனோர் உள்நாட்டிலேயே பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இலங்கையில் வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2020-2023 ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த வருடங்களில் வெளிநாடு செல்வதற்காக விடுமுறை எடுத்தவர்கள் ஏழு பேரைத் தவிர வேறு எவரும் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக வாரியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் 80, பேராதனையில் 41, ஜயவர்தனபுர 35, களனி 54, திறந்த பல்கலைக்கழகத்தில் 17, ருஹுணு பல்கலைக்கழகத்தில் 81 என 90% பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏழு வருட விடுமுறை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...