2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

14 5

2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2023(2024) ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Exit mobile version