பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்

tamilni 22

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01.12.2023) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான கட்ஆஃப் (Cut-off) புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்பட்டால் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியானவையாக கருதப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகளும் கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி இன்று அல்லது நாளை வெளியிடப்பட அதிக சாத்தியக்கூறுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version