மார்ச் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, மூடப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக மேலதிக எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சார நெருக்கடி மற்றும் மின்வெட்டு தொடர்பாக அமைச்சரவை கூட்டத்திலும் ஆராயப்பட்டு, மாற்று வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிய வருகிறது.
” மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை தனியே இறக்குமதி செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews