யாழ்ப்பாணத்தில் பரவும் திடீர் காய்ச்சல் : கொழும்பிலிருந்து வெளியான அறிவிப்பு

WhatsApp Image 2024 12 12 at 2.03.44 PM 1

யாழ்ப்பாணத்தில் பரவும் திடீர் காய்ச்சல் : கொழும்பிலிருந்து வெளியான அறிவிப்பு

யாழ்.மாவட்டத்தில்(jaffna) தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது எலிக்காய்ச்சலா(leptospirosis) என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில் சமூக வைத்தியர் குமுது வீரகோன்(Dr. Kumudu Weerakoon) தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரவும் காய்ச்சலுக்கு எலிக்காய்ச்சலுடன் தொடர்புள்ளதா என்பதை கண்டறிய காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

“அடையாளம் தெரியாத காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இன்புளுவன்சா, எலிக்காய்ச்சல், டெங்கு போன்ற நோய்கள் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ” என்று வைத்தியர் குமுது வீரகோன் குறிப்பிட்டார்.

எனினும், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பருவகால நெல் விவசாயம் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் எலிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு வெள்ளத்தின் போது பல மரணங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் இந்த இறப்புகள் எலிக்காய்ச்சலால் ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்க அமைச்சகம் விசாரணைகளை நடத்தி வருகிறது.

இதுவரை, இந்த ஆண்டில் 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு காரணங்களால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில், 9,000 க்கும் அதிகமானோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 200 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Exit mobile version