25 6902f64dd2465
இலங்கைசெய்திகள்

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு: பொலிஸ் தீவிர விசாரணை

Share

 

இலங்கையின் மட்டக்குளி மற்றும் பமுனுகம காவல் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த காவல் நிலையங்களுக்கு நேற்று (29) கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரைப் பகுதியிலும், களனி கங்கையின் முகத்துவாரத்திற்கு அருகிலும் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மற்றொரு ஆணின் சடலம், பமுனுகம, எபாமுல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீடொன்றின் பின்புற காணியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாவது நபர், இறுதியாக கறுப்பு நிற சாரம் மற்றும் இளம் நீல நிறக் குறுகிய கை சட்டை அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் அவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 5 அடி 7 அங்குல உயரம் கொண்ட, மெலிவான உடல்வாகைக் கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சடலங்களின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்குளி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பமுனுகம பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம், திடீர் மரண விசாரணைக்குப் பின்னர் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 2b35ae96f8
இலங்கைசெய்திகள்

இந்திய விசா, கடவுச்சீட்டு சேவைகள் இனி நேரடியாக! – நவம்பர் 3 முதல் உயர்ஸ்தானிகராலயங்கள் மூலம் சேவை

எதிர்வரும் 03ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய...

25 6903096ee28d6
உலகம்செய்திகள்

அணு ஆயுத சோதனை களத்தில் அமெரிக்கா: ட்ரம்பின் அதிரடி முடிவு உலகிற்கு எச்சரிக்கை

அமெரிக்க அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அநாட்டு இராணுவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

images 4 3
இலங்கைசெய்திகள்

கடலில் மிதந்துவந்த திரவம் 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த ஒரு போத்தலில் (புட்டியில்) இருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த...

25 6902e1df2434d
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் விவகாரம்: மருத்துவ அறிக்கைகள் மீது நீதிமன்றில் சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு தமனி அடைப்பு...