இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் அரச நியமனம் கோரி வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Share
10 10
Share

மட்டக்களப்பில் அரச நியமனம் கோரி வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (07) அம் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காந்திபூங்காவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “அரச நியமனத்தினை உறுதிப்படுத்து“, “காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே“, “அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே“, “வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்“ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த மாவட்டத்தில் இது வரையில் 2000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு கனவுகளுடன் பல கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ள போதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

சுமார் ஒரு மணித்தியாலம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தொடர்ந்து பழைய கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்து போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்தனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...