இலங்கைசெய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைதாக மாட்டார்கள் : நலிந்த ஜயதிஸ்ஸ

Share
1732616154 2
Share

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைதாக மாட்டார்கள் : நலிந்த ஜயதிஸ்ஸ

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் ஊடாக எவரையும் கைது செய்யவோ, வழக்குத் தொடரவோ அல்லது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவோ அரசாங்கம் யாருக்கும் அறிவுறுத்தல் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவருக்கும் ஏதேனும் காரணத்திற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நாடாளுமன்றில் சட்டமொன்று இயற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் நாட்டின் நன்மதிப்பினை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் ஊடகமொன்று இந்த திட்டம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் பலாக்காய் அல்லது இலைகஞ்சி விற்பனை செய்ய முடியாது என ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...