tamilni 116 scaled
இலங்கைசெய்திகள்

தமிழர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

தமிழர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட தருணத்தில் தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு கரிநாள் போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர்.

தமிழர்களின் இந்த போராட்டத்தில் அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழர்களின் போராட்டத்தை அடக்கி, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையளர் வோல்கர் டர்க்கிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி இலங்கையின் 76 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு படையினர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ருத்ரகுமாரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதான தமிழ் அரசியல் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டு போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த போராட்டத்துடன் தொடர்புடைய ஐந்து பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான தாக்குதல்கள் அடக்குமுறைகளை தடுக்கவும் தாக்குதல் மேற்கொண்டவர்களை தண்டிக்கவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...