இலங்கைசெய்திகள்

பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் எதுவும் இல்லை: சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு

Share

பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் எதுவும் இல்லை: சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு

பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இந்தமுறையும் சாதகமான தீர்வினையோ அல்லது புதிய முன்மொழிவுகளையோ முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த அரசும் கடந்த காலங்களைப் போன்றே செயற்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் தற்போது நடைபெறுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா – தமிழ் விக்கிப்பீடியாசென்று பல விடயங்களைக் கூறியுள்ளார். ஆனால், பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த காலங்களில் செய்த விடயங்களை விட புதிய அரசின் புதிய முன்மொழிவுகள் எதனையும் கூறவில்லை.

வடக்கு, கிழக்கு மக்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் உள்ளனர். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது மக்களைக் கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால், கடந்த காலங்களில் அரசுகள் செய்ததைப் போன்றே தற்போதைய அரசும் செயற்படுகின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் உள்ளிட்ட பொறிமுறைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தற்போது கூறியிருந்தாலும் இவை அனைத்தும் தமிழ் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நிராகரித்த பொறிமுறைகளாகும்.

இதேவேளை, வடக்கு மக்கள் வாக்கு வழங்கியுள்ளனர். உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசமைப்பு பற்றி தெளிவாகக் கூறியுள்ளீர்கள். ஆனால், அது தொடர்பில் இன்று வரையில் ஒரு வார்த்தையேனும் கூறவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை புதிய அரசமைப்பில் நிரந்தரப் பெயராக உள்ளடக்கவுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

அமைச்சர் சந்திரசேகரிடம் ஒன்றைக் கேட்கின்றேன். வடக்கு மக்கள் புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்றனர். அது பற்றி நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள். அதிகாரப் பகிர்வை விடுவோம். ஆனால், புதிய அரசமைப்பு வருமா? வராதா? வந்தால் அதில் உள்ளடக்கம் என்ன? பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான ஒதுக்கீடுகளும் இன்றைய விவாதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையில் பொறுப்புக்கூறல் என்பது மிகவும் பிரதானமான விடயமாகும்.

ஆனால், வெளிவிவகார அமைச்சர் எந்தச் சாதகமான பதிலையும் வழங்கவில்லை. இதற்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பதிலளிப்பார்கள் என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...