rtjy 32 scaled
இலங்கைசெய்திகள்

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தை புறக்கணித்த சஜித்

Share

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தை புறக்கணித்த சஜித்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாமல் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தடுத்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தான் மூன்றாவது தடவையாக பங்குபற்றியதாகக் கூறியதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், டபிள்யூ.எச்.எம். தர்மசேன மற்றும் கின்ஸ் நெல்சன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அரசாங்க தரப்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் காலங்களுக்குள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை நிகழ்வில் தாம் மூன்று தடவைகள் கலந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் சர்வதேச நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தநிலையில் உலக வங்கி பிரதிநிதிகள் மற்றும் சமந்தா பவர் ஆகியோருடன் சந்திப்புகளில் அமர்வதற்கு தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

எனினும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியது போல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக தினசரி கொடுப்பனவு பயண கொடுப்பனவு எதையும் பெறவில்லை” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...