17 5
இலங்கைசெய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அநுரவுடன் பேச்சு – கஜேந்திரகுமாரிடம் ஐநா பிரதிநிதி உறுதிமொழி

Share

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அநுரவுடன் பேச்சு – கஜேந்திரகுமாரிடம் ஐநா பிரதிநிதி உறுதிமொழி

அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் (Anura Kumara Dissanayake) பேசுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் (Mark Andrew French) உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு (Gajendrakumar Ponnambalam) ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது நாட்டின் சமகால நிலவரம், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டை தொடர்ந்து முன் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் இயலுமை உள்ளிட்ட விடயங்கள் பற்றி வதிவிடப் பிரதிநிதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டறிந்தார்.

அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் இப்புதிய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ஊழல் மோசடிகள் குறையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

இருப்பினும் ‘தற்போது இந்த அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றிருக்கும் நிலையில், ஏற்கனவே நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முரணாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்காமல் தொடர்வதையே அல்லது பொருளாதார சுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையோ நியாயப்படுத்த முடியாது.

எனவே அடுத்துவரும் ஒரு வருட காலத்துக்குள் இவ்விரண்டு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு இருக்கிறது எனவும் அவர் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்சிடம் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இப்போது தமிழரசுககட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒரு உறுப்பினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 10 உறுப்பினர்களும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

அதனை முன்னிறுத்தி அவரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நகர்வுகள் பற்றியும் மார்க் அன்ட்ரூ பிரெஞ்சுக்கு விளக்கமளித்தார்.

மேலும் நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேர் தொடர்பில் பேசப்பட்டபோது அவர்களது விடுதலை குறித்து தானும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் கஜேந்திரகுமாரிடம் வாக்குறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...