articles2F5erOvsc6djiIYVO8MiFX 1
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐ.நா.வின் 35.3 மில்லியன் டொலர் நிதி கோரிக்கை!

Share

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாய் 10.9 பில்லியன்) நிதியை கோரி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய பங்காளிகள் ஒரு மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தை (HPP) வியாழக்கிழமை (11) ஆரம்பித்தனர்.

இந்தத் திட்டமானது 2025 டிசெம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரை அவசர உதவி தேவைப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 658,000 மக்களைச் சென்றடைவதில் கவனம் செலுத்துகிறது என இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரு தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் வியாழக்கிழமை (11) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ​அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த மனிதநேய முன்னுரிமைத் திட்டம் (HPP), சூறாவளியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளுக்கு உதவி வழங்குவதன் மூலம் சர்வதேச உதவிக்கான அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது என்றார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...