இலங்கைக்கு குடும்பத்துடன் வந்த பிரித்தானியர் மரணம்

14 3

இலங்கைக்கு குடும்பத்துடன் வந்த பிரித்தானியர் மரணம்

சீகிரியாவின் சுவரோவிய குகைக்கு அருகில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

70 வயதுடைய பிரித்தானிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பிரஜை அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சீகிரியாவை பார்வையிட வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் சீகிரியாவில் ஏறும் போது திடீரென சுகவீனமடைந்து சீகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version