அமைதியாக இருந்தால் சாணக்கியன் - சுமந்திரனுக்கு பதவிகள்
இலங்கைசெய்திகள்

அமைதியாக இருந்தால் சாணக்கியன் – சுமந்திரனுக்கு பதவிகள்

Share

அமைதியாக இருந்தால் சாணக்கியன் – சுமந்திரனுக்கு பதவிகள்

எதிர்வரும் 21ஆம் திகதி குருந்தூர்மலைக்கு செல்லவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.

குருந்தூர்மலை விகாரை சம்பந்தமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த விடயங்கள் பொய்யானவை என்பதை ஒப்புவிப்பதற்காகவே தாங்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குருந்தூர்மலை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் இடங்கள் தொடர்பில் உதய கம்மன்பில ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, குருந்தூர்மலை விகாரை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க வேண்டியிருப்பது பிரிவினைவாதிகளிடமோ, அடிப்படைவாதிகளிடமோ இருந்து அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்தே அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

வரலாறு பற்றிய துளியும் அறிவில்லாத, தம்மை அறிவாளிகள் என்று காட்டிக்கொள்ளும் நபர்களிடம் இருந்து எமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் தொல்லியல் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்குமாறு கோரி நாங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி சபாநாயகரிடம் யோசனை ஒன்றை கையளிக்க உள்ளோம்.

கிழக்கில் தொல்லியல் முக்கியத்துவமிக்க 27 இடங்கள் இருப்பதாக அறிவித்திருந்தார். தற்போது தொல்லியல் பெறுமதிமிக்க இடங்கள் அதனை விட அதிகரித்துள்ளன.

இவை அழிவுக்கு உட்படுத்துவதற்காக அரச அதிகாரிகள் நீதிமன்றங்களில் பொய்யான அறிக்கைகளை வழங்கி வருகின்றனர்.

தொல்லியல் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் கடமைகளைச் செய்ய முயற்சிக்கும் போது பிரிவினைவாதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு தடையேற்படுத்துவதாக எங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளராகச் சாணக்கியன் ராசமாணிக்கத்தையும் கலாசார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரனையும் நியமிக்கவும் வாய்ப்புள்ளது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்த காலங்களிலேயே வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்கள் அழிக்கப்பட்டன.

இதனால், அவர் தலைமை தாங்கும் அரசாங்கத்திடம் தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க ஒப்படைப்பது, நரியிடம் கோழியை வழங்கியமைக்கு ஈடானது எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
26 6979d645135d9
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கைது: பெப்ரவரி 11 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், அவரது...

26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...