பெண்களின் படங்கள் இணையம் மூலமாக விற்பனை
பெண்களின் நிர்வாண புகைப்படங்களை இணையம் முலமாக விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (26.10.2023) கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்கள் இருவரும் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி வரை சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.