4 25
இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் 2 நாமல் ராஜபக்சக்கள் போட்டி! கட்டுப்பணம் செலுத்திய விக்ரமசிங்க

Share

ஜனாதிபதி தேர்தலில் 2 நாமல் ராஜபக்சக்கள் போட்டி! கட்டுப்பணம் செலுத்திய விக்ரமசிங்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச என்ற பெயரை உடைய இரு வேறு வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமம்பாளர் நாமல் ராஜபக்ச இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மற்றுமொரு நாமல் ராஜபக்சவும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சமபிம கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச என்பவருக்காக ஹேமந்த விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் 36 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

எவ்வாறெனினும், ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்னமும் கட்டுப்பணம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் நண்பகல் வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

cardinal malcolm ranjith
இலங்கைசெய்திகள்

இலங்கைப் பாடத்திட்டத்தில் ‘பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்’: கலாசார விழுமியங்கள் சிதைவடையும் – கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை!

இலங்கைப் பாடசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள “பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்” குறித்துக்...

sajith 240423
செய்திகள்அரசியல்இலங்கை

சஜித் பிரேமதாசவுக்கு அனுரகுமார திசாநாயக்க நன்றி: “மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர், அதனால்தான் சஜித் செல்லவில்லை!

எதிர்க்கட்சிகளின் சில குழுக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் பேரணி நடத்துவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார...