14 31
இலங்கைசெய்திகள்

யாழ். மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் விஸ்தரிப்பு

Share

யாழ். மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் விஸ்தரிப்பு

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கோரியுள்ளது.

இலங்கையின் அரசால் நடத்தப்படும் விமான நிலைய முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை (JIA) விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரியுள்ளது.

எனினும், கொழும்பு விமான தகவல் பிராந்தியத்திற்கு அருகாமையில் விமான நிலையங்கள் காணப்படும் இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்படவில்லை.

போட்டித்தன்மை காரணமாக இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனமானது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து விலை மனுக்களை கோரியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரையில் விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையக் கட்டிடத்தை கட்டி முடிக்கும் இந்த திட்டமானது, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட உள்ளது.

பிரதான முனைய கட்டிடம், உயரமான சாலை போன்ற உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் காலக்கெடு ஜனவரி 29ம் திகதியன்று முடிவடைகிறது.

சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்திற்காக கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு சாத்தியக்கூறு ஆய்வையாவது மேற்கொண்ட விமான நிலைய ஆலோசனை நிறுவனங்கள் அல்லது கூட்டு முயற்சிகளில் இருந்து விலை மனுக் கோரப்பட்டது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...