தீப்பிடித்து எரிந்த இரு சொகுசு பேருந்துகளால் பரபரப்பு

24 65fd595764a16

தீப்பிடித்து எரிந்த இரு சொகுசு பேருந்துகளால் பரபரப்பு

மாத்தறையின் கெகனதுர வெஹரஹேன வீதியில் உள்ள காணி ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சொகுசு பேருந்துகள் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது இன்று (22.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது தீயில் எரிந்த இரு சொகுசு பேருந்துகளும் அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுபவை என கூறப்படுகிறது.

இரு சொகுசு பேருந்துகளும் தீப்பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version