21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

Share

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு 151 உள்ளூராட்சி மன்றங்களில் தெளிவான பெரும்பான்மை கிடைக்கப் பெற்றிருந்தது.

அதற்கு மேலதிகமாக ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் மேலும் 49 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 27 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை மட்டுமே கைப்பற்றிக் கொண்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சி ஒரு உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.இலங்கை விடுதி

ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ளமுடியவில்லை.

அதேநேரம், சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புகள் 12 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...