கூலிப்படையாக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தினர்

24 663be6508dbba

கூலிப்படையாக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தினர்

ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு இலங்கை இராணுவத்திரை அனுப்பிய குற்றச்சாட்டில், இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் , இராணுவ சார்ஜண்ட் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தில் வைத்து இன்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை இராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளை ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு கூலிப்படையாக அனுப்பி வைப்பதற்கான தரகர்களாக செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் எதிரான விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Exit mobile version