யானை தாக்கி இருவர் பரிதாப மரணம்

tamilni 336

யானை தாக்கி இருவர் பரிதாப மரணம்

இலங்கையில் இருவேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 52 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் அனுராதபுரம் மாவட்டம், மதவாச்சி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 48 வயதுடைய வயல் காவலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

மேற்படி இரு சம்பவங்களும் நேற்றைதினம் (26.10.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்த இருவரினதும் சடலங்களும் அந்தந்த பிரதேச வைத்தியசாலைகளில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version