20 வயது மகனுக்கு தந்தை செய்த கொடூரம்

tamilni 313

20 வயது மகனுக்கு தந்தை செய்த கொடூரம்

அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நேற்று (14.2.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அங்குனகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

50 வயதுடைய தந்தை தனது 20 வயது மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் வைத்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த தந்தை மற்றும் மகன் இருவரின் சடலங்களும் அங்குனகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version