நாட்டின் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

tamilni 482

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண ஏரிக்கு அருகில் உள்ள கல் குகையில் நேற்று (27) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் அடையாளம் இதுவரை தெரியவரவில்லை எனவும், 45-50 வயதுடைய 5 அடி 5 அங்குல உயரமுள்ள ஆண் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அவர் ஊதா நிற சட்டையும், ஊதா கலந்த காற்சட்டை அணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

இதேவேளை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல புகையிரத கடவைக்கு அருகில் உள்ள மா ஓயாவில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் 35-40 வயதுடைய, 5 அடி 2 அங்குல உயரமும் கருப்பு நிற சட்டையும் பச்சை நிற காற்சட்டையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version