818 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி நகரம் பருத்தித்துறை வீதியில் வைத்து இன்று மாலை இருவரும் கைது செய்யப்பட்டனர்.
காங்கேசன்துறை அந்தோனிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 818 கிராம் ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 6 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர். மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment