யாழில் பேஸ்புக் மூலம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

Rasi palan30 6

முகநூலில்(Facebook) பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலையை சேர்ந்த நபரை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக திருகோணமலையை சேர்ந்த நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version