தென்னிலங்கையில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாயின் மோசமான செயல்

tamilni 377

தென்னிலங்கையில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாயின் மோசமான செயல்

தென்னிலங்கையில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணே இவ்வாறு சென்றுள்ளார். கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளார்.

திருமணமாகி சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் என்னால் வலியைத் தாங்க முடியவில்லை, அதனால் இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ளமுடியவில்லை, எனவே நான் வீட்டை விட்டு செல்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

வீட்டை விட்டு செல்லும் போது கையடக்க தொலைபேசியை தவிர வேறு எந்த பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயின்றி குழந்தைகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையினால் காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு பொலிஸாரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version