32 3
இலங்கைசெய்திகள்

மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு

Share

மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு

இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக மியன்மாருக்கு (Myanmar) கடத்தப்பட்ட இருபது (20) இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM – UN) மீட்டுள்ளது.

குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் முறையான வேலை வாய்ப்புகள் மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைப் பாத்திரங்கள் என்ற போலிக்காரணத்தின் கீழ் பல்வேறு இணைய மோசடி நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டதும், தாய்லாந்தில் (Thailand) உள்ள இலங்கைத் தூதரகம், தாய்லாந்து அரசாங்கத்தால் நடத்தப்படும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன் ஐ.எம்.ஓ தேவையான உடனடி உதவிகளை வழங்கியுள்ளது.

இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு கடத்தப்பட்டோரை மீட்பதற்காக இலங்கையில் உள்ள ஐ.எம்.ஓ குழுவினர் தாய்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம், கடத்தல்காரர்களால் நடத்தப்படும் இணையக் குற்றச் செயல்களில் அடிமைப்படுத்தப்பட்ட இலங்கைப் பாதிக்கப்பட்டவர்களின் மோசமான நிலைமையை அதிகாரிகளின் கவனத்திற்குத் தொடர்ந்து கொண்டு வந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

இலங்கை, தாய்லாந்து மற்றும் மியன்மாரில் உள்ள அதன் இராஜதந்திர தூதரகங்கள், பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலான தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு – இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை சுமூகமாக திரும்பும் செயல்முறையை உறுதி செய்வதில் வழக்கமான இடப்பெயர்வை ஊக்குவிக்க அனைத்து கூட்டாளர்களுடனும் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ஐ.எம்.ஓ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...