6 83
இலங்கைசெய்திகள்

ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி

Share

ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி

20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த உறவுகளுக்கு சுனாமி பேபி 81 என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் அஞ்சலி செலுத்தினார்.

மட்டக்களப்பு (Batticaloa) குருக்கள் மடத்திலுள்ள அவரது வீட்டில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில் இன்று (26) காலை 9.05 மணிக்கு குடும்பத்தினருடன் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலப்பட்டது.

இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக ”சுனாமி பேபி 81”எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினான் இந்த ஜெயராசா அபிலாஷ்.

இந்தக் குழந்தை என்னுடையது என்னுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது.

இக்குழந்தை எங்களுடையது என ஒன்பது தாய்மார் போராடிய நிலையில், ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

பின்னர் 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர்களின் புதல்வனே அபிலாஷ் என நிரூபணமாகிய பின்னர் அந்த குழந்தை குறித்த தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றார்.

இந்த நிலையில் 20 வயதுடைய அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது பெற்றோருடன் அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...