இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த பரக் ஒபாமா : சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி

Share
tamilnih 8 scaled
Share

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தற்போது இலங்கையில் தங்கிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறை, கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க எழுச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் பல புகழ்பெற்றவர்களும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தற்போது இலங்கையில் விடுமுறையை கழிப்பதாக தவறான சமூக ஊடக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும், அவர் இலங்கை வீதியிலுள்ள சிறிய விற்பனையகத்தில் இளநீரைக் குடித்துக்கொண்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

எனினும், பராக் ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்பதை பல நம்பத்தகுந்த தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தநிலையில், பராக் ஒபாமா, இளநீரை ருசிக்கும் உண்மைப்படங்கள், 2016இல் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது லாவோஸுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் படங்கள் இந்தோனேசிய படைப்பாளரான அகன் ஹராஹாப்பினால் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...