25 683d9e89f25aa
இலங்கைசெய்திகள்

பைடன் கொலை செய்யப்பட்டார் – தற்போதிருப்பது யார்..! பகீர் கிளப்பிய ட்ரம்பின் பதிவு

Share

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் சமீபத்தில் பகிர்ந்த பதிவொன்று அரசியல் மற்றும் ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

அந்த பதிவில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) 2020 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்றும், தற்போது அவக்கு பதிலாக ஒரு க்ளோன் அல்லது இயந்திர மனிதன் செயல்பட்டு வருகிறான் என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கருத்தை மற்றொருவர் எழுதியிருந்ததை ட்ரம்ப் தன் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம், அதை உலகக் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த வகை கூற்றுகள் உண்மைக்கு புறம்பானவை மட்டுமல்லாமல், பொது மக்களை தவறாக வழிநடத்தும் அபாயமும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், இதைப் போன்ற சதி கோட்பாடுகளை பரப்புவது, ட்ரம்பின் பழைய அரசியல் நடைமுறையின் தொடர்ச்சியாகும் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களில் அவர் 2020 தேர்தலில் தான்தான் வென்றதாகவும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிறப்பிடம் குறித்தும் நம்பகத்தன்மை இல்லாத செய்திகள் பரப்பியிருந்தது நினைவுக்கூறத்தக்கது.

இந்த வகையான தகவல்கள் சமூக நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இவை அவசியமற்ற குழப்பங்களையும் சமுதாயப் பிளவுகளையும் உருவாக்குகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அரசியலில் ஏற்கெனவே தவறான தகவல்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் சூழலில், ட்ரம்ப் மேற்கொண்ட இந்த செயல் மேலும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...