சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிதி கிடைப்பதில் சிக்கல்

24 6614d4234119f

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிதி கிடைப்பதில் சிக்கல்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நீடிக்கப்பட்ட நிதி வசதி, எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் கிடைப்பதில் தடைகள் தொடர்கின்றன.

பத்திரப்பதிவுதாரர்கள் உட்பட கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கைகளை எட்டுவதற்கான கால அவகாசத்திலேயே, இன்னும் இலங்கைக்கு கடின நிலை தொடர்கிறது.

திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வின் பின்னர் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு அடுத்த 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னர், இருதரப்புக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பாரிஸ் கிளப் நாடுகளுடன் இலங்கை கையெழுத்திட வேண்டும்.

இதற்கிடையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் ஆணையம் ஜூன் மாத இறுதிக்குள் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிப்பது அரசாங்கத்திற்கு இன்னும் சவாலாக உள்ளது. 2022 ஏப்ரலில் இலங்கை திவாலானதாக அறிவித்தது, அதன் பின்னர் நாடு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தத் தவறிவிட்டது.

ஒப்பந்தங்களின்படி, முதல் ஆறு ஆண்டுகளுக்குள் 37 சதவீத கடன்களையும், 6-20 ஆண்டுகளுக்குள் 51 சதவீதத்தையும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீதமுள்ள 12 சதவீதத்தையும் தீர்க்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version