1 84
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருகோணமலை கடற்கரை விவகாரம்: 4 பிக்குகள் உட்பட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!

Share

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அத்துமீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் என மொத்தம் 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (09) திங்கட்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்குப் பிணை மறுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களும் கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பிணை கோரி மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் முன்னைய நீதிமன்ற உத்தரவுகளைக் கருத்திற்கொண்டு, பிணை மனுக்களை நிராகரித்த மேல் நீதிமன்றம், அனைத்துப் பிரதிவாதிகளையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

 

 

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...