வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இருந்தவர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு ஆணையாளரின் உத்தரவின்படி மாகாண நிர்வாகத்தில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அதன்பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த செந்தில்நந்தனன் மாகாணசபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிய சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த இளங்கோவன் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராகவுள்ள வரதீஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
பேரவைச் செயலாளர் குகநாதன் பிரதி பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பதில் பிரதம செயலாளராக பணியாற்றி வந்த பற்றிக் றஞ்சன் உள்ளுராட்சித் திணைக்கள ஆணையாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆளுநரின் செயலாளராக தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews
- accordingly
- Commissioner of Local Government
- Council Secretary
- Deputy Chief Secretary
- Divisional Secretary
- Featured
- governor
- Kuganathan
- Ministry of Education
- ministry of health
- Ministry of Home Affairs
- Northern Commissioner
- Northern Provincial Ministries
- provincial administration
- Saraswathi Mohanathan
- Secretary
- Secretary to the Governor.
- Secretary to the Provincial Council
- Senthilnandan
- tamilnaadi
- tamilnaadiNews
- transfers
- Varadheeswaran
Leave a comment