புகையிரதங்களுக்கு எதிர்வரும் 3 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் புகையிரதம் சேவைகளும் தடைப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
புகையிரதங்களை இயக்குவதற்காக மூன்று நாட்களுக்கு மாத்திரம் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
இதன்காரணமாக சில மட்டுப்படுத்தல்களுடன் புகையிரத சேவைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உரிய வகையில் எரிபொருள் பெற்றுத் தரப்படும் என கனியவள கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
#SrilankaNews

