4 9
இலங்கைசெய்திகள்

யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து முக்கிய அறிவிப்பு

Share

யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கொழும்பு (Colombo) வரையான குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து சேவையானது எதிர்வரும் 30 ஆம் திகதி மேலதிக சேவையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இச்சேவையை வழங்கி வந்த கடுகதி தொடருந்து சேவை சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30 ஆம் திகதி வரை தனது சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு நாளும் அதிகாலை 5. 30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட தொடருந்தானது முற்பகல் 11: 15 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து மதியம் 12. 34 இற்கு பயணத்தை ஆரம்பித்து இரவு 7.20 இற்குகொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்து தனது பயணத்தை நிறைவு செய்கிறது.

இதேவேளை கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதிகளவாக பயணம் செய்யும் பயணிகள் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளான வெள்ளவத்தை (Wellawatte), பம்பலப்பிட்டி, கல்கிசை ஆகிய பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

தொடர்ச்சியான சேவையை கல்கிசை வரை வழங்குவதன் ஊடாகவே தம்மால் இலகுவாக பயணம் செய்ய முடியும் எனவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...