tamilni 340 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து

Share

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று (27.09.2023) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த தொடருந்தே கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் தொடருந்து இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து செல்லும் பயணிளுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக தொடருந்து பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...