மல்வத்து ஓயா சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு!

image 1405e49d0e

அநுராதபுரம் மல்வத்து ஓயா ஆற்றில் தாயுடன் குதித்து காணாமல்போன இரண்டு குழந்தைகளில் ஒருவரான சிறுமியின் உடல், அநுராதபுரம் ‘மல்வத்து ஓயா லேன்’ சாலைக்குச் செல்லும் புதிய பாலத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) கண்டெடுக்கப்பட்டதாக அநுராதபுரம் காவல்துறையின் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொரட்டுவை, அங்குலான, ரயில்வே பலாபாரவைச் சேர்ந்த சித்துள்ளிய மீரியகல்லே (சிறுமி) மற்றும் அவரது ஒரே சகோதரரான திஷுகா மீரியகல்லே (8 வயதுச் சிறுவன்). காணாமல்போன மூன்று நாட்களுக்குப் பிறகு, கடந்த டிசம்பர் 4ஆம் திகதி அநுராதபுரத்தின் மிஹிந்துபுரப் பகுதியில் 8 வயதுச் சிறுவன் திஷுகா மீரியகல்லேவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் உடல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவரது இடது கையும் இடது காலும் காணாமல் போயிருந்ததாகவும், அது முதலைகள் அல்லது பாம்புகளால் தின்னப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழு நாட்களுக்கு முன்பு, மொரட்டுவை அகுலான பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார், தனது எட்டு வயது மகன் மற்றும் நான்கரை வயது மகளுடன் அநுராதபுரத்திற்கு வந்து, அநுராதபுரம் பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள மிஹிந்துபுர பாலத்திலிருந்து கடந்த டிசம்பர் 2ஆம் திகதி மல்வத்து ஓயாவில் குதித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அநுராதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version