tamilni 441 scaled
இலங்கைசெய்திகள்

நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Share

நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இறுதி விடுமுறையினை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.

குறிப்பாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் , நத்தார் பண்டிகை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர்கிறது இதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடு முறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக நுவரெலியா விக்டோரியா பூங்காவிலும் கிரகறி பூங்காவிலும் கிறகறி வாவி கரையிலும் , உலக முடிவு, சீத்தாஎலிய கோவில் , வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்ட கூட்டமாக குவிந்து காணப்படுகின்றனர்.

Gallery

மேலும், நுவரெலியா கிறகரி வாவி கரையில் அமைக்கப்பட்டுள்ள களியாட்ட நிகழ்வுகளிலும் , மட்டக்குதிரை சவாரி செய்யும் இடத்திலும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளனர் .

இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் பிராதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்களை பார்த்து பொழுதுபோக்கி வருகின்றனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Gallery

இதனிடையே டிசம்பர் மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 750ற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிக நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 20 ஆயிரத்து 597 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 14 ஆயிரத்து 156 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10 ஆயிரத்து 281 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ,பிரான்ஸ், கனடா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதேவேளை ஆண்டுக்கான அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை முறையே நவம்பர் (151, 496),ஜூலை (143,039) மற்றும் ஆகஸ்ட்(136,405) மாதங்களில் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Gallery

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...