ஜூலையில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்
நடப்பு மாதமான ஜூலையில் இதுவரை இலங்கைக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த தகவலை தெரிவித்துள்ளது
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட அண்மைய தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 23 நாட்களில் 104,664 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மொத்தம் 100,388 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்ததாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Leave a comment